Dear Friends,From today's 11 June Dailythanthi.K.H.Krishnan.
------------------------------------------------------------------------
CRS A.K.Mittal's Inspn on June 20,21.So DRM runs a trial with an engine and parcelvan in this route on 12 June.Each station has been provided with the necessary materials and officers appointed.Traffic will start immediately after the green signal from CRS.
விருதுநகர்– மானாமதுரை அகல ரெயில் பாதையை மதுரை கோட்ட மேலாளர் நாளை ரெயிலில் சென்று ஆய்வு செய்கிறார்...
more...
பதிவு செய்த நாள் : Jun 11 | 08:56 pm
விருதுநகர்,
விருதுநகர்– மானாமதுரை அகல ரெயில் பாதைப் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதையொட்டி ரெயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனர் ஆய்வுக்கு வருகிறார். அதற்கு முன்னேற்பாடாக நாளை மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ரெயிலில் சென்று இப்பாதையை ஆய்வு செய்கிறார்.
அகல ரெயில் பாதை
விருதுநகர்–மானாமதுரை இடையேயான 66 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதை திட்டப்பணி கடந்த 2008–ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்க ரெயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனர் ஏ.கே.மிட்டல் வருகிற 20 மற்றும் 21–ந்தேதிகளில் ஆய்வு செய்ய வருகிறார். அவர் ஆய்வு செய்து இந்த ரெயில் பாதை ரெயில் போக்குவரத்துக்கு தகுதியாக உள்ளதாக சான்றளித்த பின்பு இந்த ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னேற்பாடு
இதனையொட்டி நாளை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஏ.எஸ்.ரஸ்தோகி இந்த அகல ரெயில் பாதையில் ரெயிலில் சென்று ஆய்வு செய்கிறார். ரெயில் என்ஜினுடன் ஒரு பார்சல் வேனும் இணைக்கப்படுகிறது. கோட்ட மேலாளர் விருதுநகர்–மானாமதுரை இடையே உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ள பகுதிகளில் இறங்கி ரெயில் பாதையையும், அதன் சுற்றுப்புறங்களையும் ஆய்வு செய்கிறார்.
கோட்ட மேலாளர் ஆய்வுக்கு செல்லும் போது ரெயில் நிலையங்களுக்குத் தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை அந்தந்த ரெயில் நிலையங்களில் பெற்று பாதுகாப்புடன் வைப்பதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த ரெயில் நிலையத்துக்குத் தேவையான பொருட்களைப் பெற்று அதனை பாதுகாப்புடன் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள நிலையில், ரெயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் ஆய்வு செய்து சான்றளித்த பின்பு ரெயில் போக்குவரத்தை உடனடியாக தொடங்க ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Courtesy: sctsi krishnan